ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் --- ஜீவியமே

2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர்
அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் --- ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை --- ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் --- ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் --- ஜீவியமே



jaீviyame ore jaீviyame
anta characharam anaiththilume
mevi vasikkum manidhar anaiththum
bumiyil vazvathu ore dharame – jaீviyame

1. birabpathum irabpathum theyvas seyal
idaiyil irubpathu vazkkaiyakum
iyesuvil sarvathal parisuthdham kanum
parisuthdhar aadsiyil sadsi kurum
ithai vidil mudivathu vizssiyakum --- jaீviyame

2. nithdham namaividdus selvar barir
avar yarum sellum avvitamum barir
alaralum, bulampalum utaldhanaik kiralum
narakaththin thinacharik kadsi kelir
irakkaththin vazi kanar kathiyum kanbir --- jaீviyame

3. thirabbin mukam nirka aadkal thevai
thiyakaththin bathaikkus selvor thevai
‘enjanam aziyuthe’ ena eengkum aantavar
thukkaththaith dhanikkum sishar thevai
mun varuvor yarkkum ithuve velai --- jaீviyame

4. ennibbar kazinththidtak kalamathai
kathaiyaib bol manidharin nadkal sellum
ulakaththus sevai sakaiyil ooyum
unnutan marithdha bin varuvathethu?
kirisa்thuvin sevai nilaiththu nirkum --- jaீviyame

5. arbpanam dhanththaiye kai aliththen
kalvi, selvam, sukam borul anaiththum
selluven, solluven iyesuvai vazi ena
vazkkaiyil dhammaiye keாndu vazven
enrume angke nan ummil vazven --- jaீviyame